Player FM - Internet Radio Done Right
Checked 1y ago
Aggiunto quattro anni fa
Contenu fourni par Kathai Solli. Tout le contenu du podcast, y compris les épisodes, les graphiques et les descriptions de podcast, est téléchargé et fourni directement par Kathai Solli ou son partenaire de plateforme de podcast. Si vous pensez que quelqu'un utilise votre œuvre protégée sans votre autorisation, vous pouvez suivre le processus décrit ici https://fr.player.fm/legal.
Player FM - Application Podcast
Mettez-vous hors ligne avec l'application Player FM !
Mettez-vous hors ligne avec l'application Player FM !
Podcasts qui valent la peine d'être écoutés
SPONSORISÉ
Last summer, something monumental happened. One of Uncuffed's founding producers, Greg Eskridge, came home after more than 30 years in prison. In this episode we’ll bring you back to that emotional day last summer when he walked out of the San Quentin gates, free at last. Our work in prisons is supported by the California Arts Council, the California Department of Corrections and Rehabilitation, independent foundations, and donations from listeners like you. Learn more, sign up for Uncuffed news, and support the program at www.weareuncuffed.org Follow us @WeAreUncuffed on Instagram and Facebook Transcripts are available within a week of the episode coming out at www.kalw.org/podcast/uncuffed…
Kathai Solli
Tout marquer comme (non) lu
Manage series 2890601
Contenu fourni par Kathai Solli. Tout le contenu du podcast, y compris les épisodes, les graphiques et les descriptions de podcast, est téléchargé et fourni directement par Kathai Solli ou son partenaire de plateforme de podcast. Si vous pensez que quelqu'un utilise votre œuvre protégée sans votre autorisation, vous pouvez suivre le processus décrit ici https://fr.player.fm/legal.
Reading out aloud, Tamil stories for kids. When we read to kids, they develop interest in reading, extend their attention span and stretch their imagination. Let our children explore the treasure.
…
continue reading
45 episodes
Tout marquer comme (non) lu
Manage series 2890601
Contenu fourni par Kathai Solli. Tout le contenu du podcast, y compris les épisodes, les graphiques et les descriptions de podcast, est téléchargé et fourni directement par Kathai Solli ou son partenaire de plateforme de podcast. Si vous pensez que quelqu'un utilise votre œuvre protégée sans votre autorisation, vous pouvez suivre le processus décrit ici https://fr.player.fm/legal.
Reading out aloud, Tamil stories for kids. When we read to kids, they develop interest in reading, extend their attention span and stretch their imagination. Let our children explore the treasure.
…
continue reading
45 episodes
All episodes
×K
Kathai Solli

எல்லாரும் தான் தெய்வத்திடம் வேண்டுவாங்க. முனுமுனுமுனுன்னு நிறைய காசு வேணும், பணம் வேணும், நகை வேணும் இன்னும் என்னென்னல்லாமோ வேண்டுவாங்க. நஸ்ருதீன் ஹோட்ஜாவும் வேண்டுவார். ஆனா அவர் கொஞ்சம் வித்தியாசமா வேண்டுவார். கொஞ்சம் சத்தம் போட்டு வேண்டுவார். “தெய்வமே! எனக்கு ஆயிரம் தங்கக்காசுகள் வேணும். ஆயிரம் காசு. அதுக்கும் குறையா ஒரு காசு நீ கம்மியா குடுத்தாலும் எனக்கு வேண்டாம். ஆயிரம்னா ஆயிரம் தான்.” அப்படின்னு தினமும் வேண்டுவார். இது இவரோட பக்கத்து வீட்டுக்காரருக்கும் கேட்கும். ஒருநாள் அந்த பக்கத்து வீட்டுக்காரர் நஸ்ருதீன் ஹோட்ஜாவ சும்மா சீண்டிப்பாத்து விளையாடலாம்னு நினைச்சாரு. ஒரு பையில எண்ணி சரியா தொள்ளாயிரத்துத் தொன்னூத்து ஒன்பது தங்கக் காசுகளை போட்டு வைச்சுக்கிட்டாரு. அதாவது ஆயிரத்துக்கு ஒரு காசு கம்மி. நஸ்ருதீன் ஹோட்ஜா தெய்வத்திடம் காசு வேணும்னு வேண்டும்போது, அவர் வீட்டுக்குள்ள அந்தப் பையை ஜன்னல் வழியா தூக்கிப் போட்டாரு. நஸ்ருதீன் ஹோட்ஜா தன் பக்கத்துல வந்து விழுந்த அந்தப் பையைப் பார்த்ததும் “ஆஹா! தெய்வம் நம்ம வேண்டுதலை நிறைவேத்திருச்சு.”ன்னு சந்தோஷமா அந்தப் பைக்குள்ளப் பார்த்தாரு. அட! பூராந் தங்கக் காசு. அப்படியே அங்கயே கொட்டி ஒன்னுவிடாம எண்ணிப் பாத்தாரு. தொள்ளாயிரத்துத் தொன்னூத்து ஒன்பது. திரும்பவும் எண்ணிப் பாத்தாரு. திரும்பத் திரும்ப எண்ணிப் பாத்தாரு. இருந்ததென்னவோ தொள்ளாயிரத்துத் தொன்னூத்து ஒன்பது தான். “என்னடா, நம்ம தெய்வத்திடம் ஆயிரம் காசு கேட்டோம். ஆனா இதுல ஒன்னு குறையா இருக்கே. சரி பரவால்ல. இவ்ளோ குடுத்த தெய்வம் இன்னொன்னு குடுக்காமையா போகும்.”ன்னு நினைச்சுட்டே, குடுத்த தெய்வத்துக்கு நன்றிய சொல்லிட்டு, பைய மடில முடிஞ்சாரு. இதையெல்லாம் வெளிலருந்து பாத்துட்டேயிருந்த அந்த பக்கத்து வீட்டுக்காரர், “ஏய், ஏய், ஏமாத்துக்காரா.. ஒரு காசு கம்மியா குடுத்தாலும் வேணாம்னு வேண்டிட்டு இப்ப எடுத்து மடில வைச்சுக்கிட்டியே. குடுய்யா என் காச”ன்னு நஸ்ருதீன் ஹோட்ஜாட்ட சண்டைக்குப் போனாரு. “காசு தரணுமா? எதுக்கு?” ஹோட்ஜா கேக்க, “அது எல்லாம் என் காசுதான். உன்னை சோதிச்சுப் பார்க்க நான் தான் போட்டேன்”ன்னு சொன்னார். ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் முத்திப்போச்சு. பிரச்சனைய தீர்க்க நீதிமான் கிட்ட போலாம்னு சொன்னாரு பக்கத்து வீட்டுக்காரர். அதுக்கு ஹோட்ஜா, “அது முடியாது. எனக்கு உடம்பெல்லாம் ஒரே வலி. அவ்ளோ தூரம் என்னால நடந்து வர முடியாது”ன்னு சொன்னாரு. “அப்படியா, அப்போ என் கழுதை மேல் உக்காந்து வா”ன்னு சொன்னாரு பக்கத்து வீட்டுக்காரர். “இல்லல்ல, நீதிமான் முன்னாடி போய் நிக்க என்கிட்ட நல்ல துணிமணி கூட இல்ல”ன்னாரு ஹோட்ஜா. “அப்படியா, இதோ நான் தர்றேன் நல்ல உடுப்பு உனக்கு. போலாம் வா”ன்னாரு பக்கத்து வீட்டுக்காரர். பக்கத்து வீட்டுக்காரரோட புது உடுப்பையும் போட்டுட்டு, அவரோட கழுதை மேலேயே உக்காந்துட்டு, நீதிமான்ட்ட போனாரு ஹோட்ஜா. பக்கத்து வீட்டுக்காரர் நீதிமான்ட்ட ஹோட்ஜாவின் வேண்டுதல் பத்தியும், தான் காசு போட்டது பத்தியும் சொன்னாரு. நீதிமான் எல்லாத்தையும் கேட்டுட்டு ஹோட்ஜாவைப் பாத்து, இதுக்கு நீ என்னப்பா சொல்றேன்னு கேட்டாரு. ஹோட்ஜா அதுக்கு, “நான் என்னத்தங்க சொல்றது. இவரு எப்பவுமே இப்படித்தான். மத்தவங்க பொருட்களை தன்னோடதுன்னு சொல்லி வம்புக்கு வருவாரு. இப்போ நீங்களே பாருங்களேன். இந்த கழுதை யாருதுன்னு கேட்டா தன்னோடதுன்னு சொல்வாரு பாருங்களேன்”ன்னாரு. நீதிமான் அதே மாதிரி பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து இந்தக் கழுதை யாருடையதுன்னு கேட்க, அவரும் அது தன்னோடதுன்னு சொன்னார். திரும்பவும் ஹோட்ஜா நீதிமான்கிட்ட, “ஐயா பாத்தீங்களா பாத்தீங்களா இப்போ நான் போட்டிருக்க சட்டையும் கூட அவருதுன்னு சொல்லுவாரு பாருங்களேன்”ன்னாரு. பக்கத்து வீட்டுக்காரரும் உடனே, “ஆமாம் அந்த சட்டையும் என்னுடையது தான்”னு சொன்னாரு. உண்மையிலேயே அந்த கழுதையும் சட்டையும் அவரோடது தானே. இதையெல்லாம் பார்த்த நீதிமான் தீர்ப்பு சொன்னாரு, “மற்றவர்கள் வைத்திருக்கும் பொருட்களை நீ உன்னுடையது என்று முறையிடுவது தவறு” என்று எச்சரித்து அனுப்பினாரு. தொள்ளாயிரத்துத் தொன்னூத்து ஒன்பது தங்கக்காசுகளும் போய், இப்போ கழுதையும், ஒரு நல்ல உடுப்பும் போய், அந்த பக்கத்து வீட்டுக்காரர் பரிதாபமாய் நின்றார். தன்னை மன்னித்து தன்னுடையதைத் தந்துவிடுமாறு ஹோட்ஜாவிடம் வேண்டினார். ஹோட்ஜா புன்னகையுடன் பக்கத்து வீட்டுக்காரரிடம் அவருடையை பணத்தையும் கழுதையையும் உடுப்பையும் திருப்பித் தந்தார். அந்த பக்கத்து வீட்டுக்காரர் அதன்பின் ஹோட்ஜாவிடம் எந்த வம்பும் செய்வதேயில்லை.…
K
Kathai Solli

ஒரு நாள் ராஜாவும் மந்திரியும் பேசிகிட்டு இருந்தாங்க. ராஜா மந்திரியிடம் நம்ம ராஜ்ஜியத்தில நிறைய மக்கள் பலவகையான தொழில் செய்றாங்க. எந்த தொழில் மிக பிரபலமாக இருக்கிறதுன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு. டாக்டரா? விவசாயியா? தொழிலாளியா? Government வேலையா? இத நீங்க கண்டுபிடிச்சி சொல்லுங்க ன்னார் . மந்திரியும் சரி ன்னார். சில நாள் கழிச்சு மந்திரி ராஜாகிட்ட வந்து நம்ம ராஜ்ஜியத்தில டாக்டர்ஸ் தான் அதிகமா இருக்காங்க என்றார். அத நான் எப்படி நம்புறதுன்னு கேட்டறாரு ராஜா. நீங்க வேணும்ன்னா மாறுவேடம் அணிஞ்சு என் கூட ஊர் சுற்றி பாருங்க உங்களுக்கே நான் சொல்றது தான் சரின்னு தெரியும் என்றார் மந்திரி. ராஜாவும் சரின்னு ஒத்துக்கிட்டார். மாறுவேடம் அணிந்து ராஜா மந்திரியுடன் மறுநாள் காலையில ஊரு சுத்தி பார்க்க கிளம்புனார். கையில் ஒரு bandage கட்டிக்க கொண்டு வந்தார் மந்திரி. என்ன ஆச்சு? என்று கேட்டார் ராஜா. மனைவி வீட்டில் இல்லை. நான் சமையல் செய்தப்போ கையை சுட்டுக் கொண்டேன். என்று சொன்னார் மந்திரி. இரண்டு பேரும் ஊருக்குள் சென்றனர். ஒரு சாதாரண நபர் போல் வேடம் அணிந்து ராஜா மந்திரியுடன் போனாங்க. நகரத்துல பலபேருக்கு மந்திரியை தெரியும். தெரிஞ்சவங்க மந்திரியை நலம் விசாரிச்சாங்க. எல்லோரும் கையில் ஏற்பட்ட காயத்திற்கு அட்வைஸ் கூறினாங்க. தேங்காய் எண்ணெய் தடவ சொன்னார் ஒருத்தர். பச்சிலை தடவ சொன்னார் இன்னொருத்தர். கத்தாழைச் சாற்றை காயம்பட்ட இடத்தில் தடவினால் சீக்கிரம் சரியாகிவிடும்ன்னு சொன்னார் மற்றொருத்தர். இப்படி எல்லோரும் மந்திரிக்கு மருந்துக்களை அட்வைஸ் பண்ணிக்கொண்டே இருப்பதை ராஜா பார்த்தார். சிரிச்சிக்கிட்டே மந்திரியின் புத்திசாலித்தனத்தை எண்ணி பாராட்டினார். ஊரெல்லாம் டாக்டர்ஸ் தான்னு ராஜா ஒத்துக்கிட்டார்.…
K
Kathai Solli

ஒரு நாள், விவசாயி ஒருத்தர் தன் ஏர் கலப்பையைத் தோளில் தூக்கிக்கொண்டு தன் வயலுக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போ ஒரு வேலியோரம் எதேர்ச்சையாகப் பார்வை பட, ஏதோ ஒன்று பெரிதாகக் கண்ணில் பட்டது. “இவ்ளோ பெருசா!” நம்ப முடியாமல் கண்ணைத் துடைத்துக்கொண்டு மறுபடியும் பார்த்தார். நன்றாக உருண்டு திரண்ட ஒரு பெரிய பரங்கிக்காய் அது. “இவ்ளோ பெரிய பரங்கிக்காய் நான் இதுவரை பார்த்ததில்லை” என்று ஆச்சரியப்பட்டார். இந்த அதிசயப் பரங்கிக்காயை ராஜாவிற்குப் பரிசளிக்கலாம் என்று தலையில் தூக்கிக்கொண்டு ராஜாவின் மாளிகைக்கு நடந்தார். பெரிய்ய்யப் பரங்கிக்காயைப் பார்த்ததும் ராஜாவுக்குப் பரவசம். “உலகிலேயே இதுதான் மிகப்பெரியப் பரங்கிக்காயாக இருக்க வேண்டும்” என்று ஆச்சரியமாகக் கூறினார் ராஜா. விவசாயியின் அன்பளிப்பைப் பெற்று மகிழ்ந்து, அவருக்குப் பொற்காசுகள் பரிசளித்து அனுப்பிவைத்தார். விவசாயியின் அதிர்ஷ்டத்தைப் பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சு. அதைக் கேள்விப்பட்டார் ஒரு பணக்கார வியாபாரி. “பரங்கிக்காய்க்கேப் பொற்காசுகளா! அப்போ ராஜாவுக்கு என்னிடமுள்ள இந்த அழகிய முத்துமாலையைப் பரிசளித்தால் அவர் எனக்கு என்னென்ன பரிசுகள் தருவார். வண்டி நிறைய வைரமும் ரத்தினமும் தருவாரோ?”என்ற ஆசையில் ராஜாவின் மாளிகைக்குச் சென்றார். அந்த முத்து மாலையை ராஜாவுக்குப் பரிசளித்தார். “ஆ! என்ன ஒரு அழகான முத்துமாலை” என்று ராஜாவும் அந்த முத்துமாலையைக் கண்டு மகிழ்ந்தார். “இந்த அழகான முத்துமாலைக்கு ஈடாக நான் உங்களுக்கு என்ன கொடுக்க முடியும்? இவ்வளவு விலை உயர்ந்த பரிசை எனக்களித்த உங்களிடம் ஏற்கனவே பொன்னும் பொருளும் ஏராளமாக இருக்கவேண்டும். அதனால் வேறொரு அரிய, பெரிய, அதிசயப் பொருளை உங்களுக்குப் பரிசளிக்கிறேன்.” என்று, விவசாயி கொண்டுவந்த அந்த பெரிய பரங்கிக்காயை வியாபாரிக்குப் பரிசளித்து அனுப்பினார் ராஜா. ஏமாற்றத்துடன், அந்தப் பெரிய்ய்ய்யப் பரங்கிக்காயைத் தலையில் தூக்கிக்கொண்டு நடையைக் கட்டினார் வியாபாரி.…
K
Kathai Solli

ஒரு இலையுதிர் காலத்துல சூரியனுக்கும் காற்றுக்கும் சண்டை வந்துச்சாம். நான் உன்னை விட வலிமையானவன்னு காற்று சூரியனைப் பார்த்து சொல்லிச்சாம். ம்ஹும் இல்லவே இல்லன்னு சூரியன் மென்மையா சொல்லிச்சாம். அப்ப அந்த பக்கமா போர்வை போர்த்திக்கிட்டு பயணி ஒருத்தர் நடந்து போய்ட்டு இருந்தத சூரியனும் காற்றும் பார்த்தாங்க. நம்ம ரெண்டு பேர்ல யார் பயணிக்கிட்ட இருந்து போர்வைய பிரிக்கிறாங்களோ அவங்கதான் வலிமையானவங்க அப்படின்னு சூரியன் சொல்லிச்சாம். காற்றும் ஐ இது நல்லா இருக்கேன்னு ஒத்துக்குச்சாம். முதல்ல பயணிக்கிட்ட இருந்து போர்வைய நான் தான் எடுப்பேன்ன்னு சொல்லிச்ச்சு காற்று. ஓகே நீயே பண்ணிக்கோன்னு சொல்லுச்சி சூரியன். காற்று வீச ஆரம்பிச்சது. பயணி தன்னுடைய போர்வைய நல்லா சுத்திக்கிட்டாரு. காற்று இன்னும் பலமா வீசுச்சாம். பயணி தன்னுடைய போர்வைய இறுக்கிப் பிடிச்சிக்கிட்டாரு. காற்று கடினமா விசுச்சாம். பயணி தன்னுடைய போர்வைய இன்னும் கெட்டியா பிடிச்சிகிட்டாரு. காற்று வேகமா வீச வீச பயணி தன் போர்வைய நல்லா விடாப்படியா பிடிச்சிக்கிட்டாரு. வேற வழி இல்லாம காற்று தன் தோல்விய ஒத்துக்கிச்சாம். இப்போ நான் ட்ரை பண்றேன்னு சொன்ன சூரியன் பயணி போற திசையை அன்போட பார்த்தது. பயணிக்கு வேர்க்க ஆரம்பிச்சது. இறுக்கமா போர்த்திட்டு இருந்த போர்வைய கொஞ்சம் தளர்வாக்கினாரு. சூரியன் பயணியின் திசையைப் பார்த்து அதிகமா சிரிச்சசாம். சூரியனோட வெம்மைய பயணி உணர்ந்து போர்வைய பிரிச்சாரு. காற்று தன்னைவிட சூரியன் தான் வலிமையானவர்ன்னு ஒத்துக்கிச்சாம். சூரியன் புன்னகையோடு ஓகே சொல்லிச்சாம். பலத்தை விட திறமைதான் பெஸ்ட்.…
K
Kathai Solli

லட்சம் பறவைகள் ராஜா ஒருத்தர் இருந்தாரு. அவருக்கு கதை கேட்பது ரொம்ப பிடிக்கும். நாட்டு மக்கள் அவர்கிட்ட தினமும் புதுசு புதுசா கதை சொல்லிகிட்டே இருப்பாங்க. ராஜா அவங்ககிட்ட அப்புறம் என்னாச்சு? கதை அவ்ளோதானா? வேற கதை சொல்லுங்கன்னு கேட்டுகிட்டே இருந்தாரு! யாராலையும் மன்னரின் கதைப்பசிக்கு தீனி போட முடியல. அரசருக்கு நாட்டுல கதை சொல்றவங்க குறைஞ்சிட்டாங்களோன்னு எண்ணம் வந்துருச்சி! அதனால ஒரு அறிவிப்பு வெளியிட்டார். யார் வேணுமுனாலும் ராஜாகிட்ட வந்து கதை சொல்லலாம். ராஜா எப்போ போதும் , கதை சொல்றது நிறுத்துன்னு சொல்றாரோ அதுவரைக்கும் அவங்க விடாம கதை சொல்லணும். அப்படி கதை சொல்றவங்களுக்கு 1000 தங்க நாணயங்களை வெகுமதி தர்றதா அறிவிச்சார் ராஜா. பல பேர் மன்னர்க்கிட்ட கதை சொன்னாங்க ஆனா யார்கிட்டயும் ராஜா கதை சொல்றது போதும்ன்னு சொல்லவேயில்லை. இன்னும் சொல்லு ! அடுத்தது என்ன? ன்னு கேட்டுகிட்டே இருந்தாரு ! கதை சொல்றவங்களோட முயற்சி தோல்வியிலதான் முடிஞ்சது. ஒரு நாள் காலையில ஒரு விவசாயி ராஜாகிட்ட வந்து மன்னர் தன்னை நிறுத்துன்னு சொல்றவரைக்கும் நான் ஒரு கதை சொல்வேன்னு சொன்னார். மன்னரும் சரின்னு சொல்லிட்டு கதை கேட்க உட்கார்ந்தார். விவசாயி கதை சொல்ல ஆரம்பிச்சார். ஒரு காலத்துல ஒரு பெரிய வேட்டைக்காரன் இருந்தான். அவன்கிட்ட ஒரு பெரிய வலை இருந்தது. அவன் ஒரு பெரிய காட்டுக்குப் போயி அந்த வலையை விரிச்சான். மதியத்துலயே லட்சக்கணக்கான பறவைகள் அவன் விரிச்ச வலையில சிக்கிருச்சி. ஆனா அதிர்ஷ்டவசமா அந்த வலையில ஒரு சின்ன துளை இருந்தது. சிறகடிச்சு முதல் பறவை தப்பிச்சிருச்சு. அப்புறம் என்னாச்சு ? கேட்டார் ராஜா. சிறகடிச்சு இரண்டாவது பறவை தப்பிச்சிருச்சி ! பிறகு ? ன்னு கேட்டார் அரசர். சிறகடிச்சு மற்றொரு பறவை பறந்து சென்றதுன்னாரு விவசாயி ! இப்படியே விவசாயி கதையை தொடர்ந்தார். ராஜா கேட்டுகிட்டே இருந்தாரு! விவசாயியும் மற்றொரு பறவை பறந்ததுன்னு சொல்லிகிட்டே இருந்தாரு ! லட்சம் பறவைகள் பறக்கிற வரைக்கும் விவசாயி இப்படியே தான் சொல்லிகிட்டே இருப்பாருன்னு புரிஞ்சிருச்சி மன்னருக்கு. இறுதியா ராஜா விவசாயியை கதை சொல்றது நிறுத்துன்னு சொல்லி 1000 தங்க நாணயங்கள் பரிசா கொடுத்தார். மன்னர் அப்புறம் ஒருபோதும் இந்த மாதிரி சவாலை முன்வெக்கல !…
K
Kathai Solli

எலி பொம்மை ஊர் தலைவரின் வீட்டில் விருந்து ஏற்பாடாகி இருந்தது. மக்கள் எல்லோரும் விருந்துக்கு வந்திருந்தாங்க. அப்போ வீட்டுத் திண்னையில் எலி ஒண்ணு போறத பார்த்தாரு தலைவர். உடனே அவருக்கு ஒரு விசித்திரமான எண்ணம் தோணுச்சு. அங்க இருந்த மக்கள்கிட்ட யார் தத்ரூபமா ஒரு எலி பொம்மைய செய்றாங்களோ அவங்களுக்கு 1000 ரூபாய் சன்மானம்ன்னு அறிவிச்சாரு. வேடிக்கையான யோசனையா இருந்ததால மக்கள் எல்லோரும் ஆர்வமாகிட்டாங்க. அதுல ஒருத்தர் தலைவர்கிட்ட எலி பொம்மையை நல்லா செஞ்சாங்கன்னு யார் தீர்ப்பு சொல்லுவா ? ன்னு கேட்டாரு. அதுக்கு தலைவர் எங்க வீட்டுல பூனை இருக்கு. அந்த பூனை எந்த எலி பொம்மைய எடுக்குதோ அந்த பொம்மைய செஞ்சவருக்குத்தான் பரிசு அப்படின்னு அறிவிச்சாரு. பூனைய விட எலிய யாருக்கு நல்லா தெரியும்ன்னு மக்களும் ஒத்துக்கிட்டாங்க. எல்லோரும் ஆவலா பங்கெடுத்துக்கிட்டாங்க. ஒருத்தர் எலிய குண்டா பண்ணினார். இன்னொருத்தர் எலியின் வால் அளவ பெருசா பண்ணினார். மற்றொருத்தர் எலியோட வண்ணம் மற்றும் உடலமைப்பை அப்படியே செஞ்சார். தலைவர் சொன்ன நாள்ல அவரவர் செஞ்ச எலி பொம்மைய காட்சிக்கு வெச்சாங்க. அதுல ராஜீவ் என்கிற சிறுவனும் தான் செஞ்ச எலி பொம்மைய காட்சிக்கு வெச்சான். அவனது பொம்மை பார்க்கிறதுக்கு எலி மாதிரியே தெரியல. மக்களும் இது எலிதானா? போட்டி என்னனு தெரியுமா ? அப்படின்னு அவனை கிண்டல் பண்ணினாங்க. அவன் அமைதியா இருந்தான். தலைவர் தன் வீட்டு பூனைய எலி பொம்மைங்க கிட்ட விடுறதுக்கு முன்னாடி காட்சிக்கு வெச்சிருந்த பொம்மைகள பார்த்தாரு. அவரும் ராஜீவ் கிட்ட வந்து தம்பி உன்னுடைய பொம்மை எலி மாதிரியே தெரியலயே. வெற்றி பெறும் வாய்ப்பும் உனக்கு இல்ல. போட்டியில கலந்துக்காத அப்படின்னு சொன்னாரு. அவன் ஒத்துக்கல. பூனையை எலி பொம்மைங்க முன்னாடி கொண்டு வர சொன்னாரு தலைவர் . பூனை வந்தது. தரையில வரிசைப்படுத்தி வச்சிருந்த எலி பொம்மைகளை பார்த்தது. தன பொம்மையை தான் எடுக்கும்ன்னு நினைச்சிட்டு இருந்தவங்க பொம்மையை பூனை எடுக்கல. ராஜீவ் செஞ்சிருந்த எலி பொம்மைய கவ்விக்கிட்டு ஓடிருச்சு. எல்லோருக்கும் ஏமாற்றம். மக்கள் யாரும் பூனையின் தீர்ப்பை ஒதுக்கல. தலைவர் மக்கள்கிட்ட நானும் அவன் பொம்மை எலி மாதிரியே இல்லை அப்ப்டிங்கிறத ஒத்துகிறேன்.ஆனா பூனை அவன் செஞ்ச எலியத் தான் எடுத்தது. மனுசன விட எலிகளை பத்தி பூனைகளுக்குத் தான் நல்லா தெரியும்ன்னு சொல்லி பரிசு பணத்த ராஜீவ் கிட்ட கொடுத்தார் தலைவர். அவன தனியா அழைச்சிட்டு போய் உன் பொம்மைய ஏன் எடுத்தது பூனை அப்படின்னு கேட்டாரு தலைவர். அதற்கு ராஜீவ் ஐயா நடுவராக பூனைக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சி நான் என் களிமண் எலி பொம்மைய கருவாடோட சேர்ந்து செஞ்சேன், அதனாலத்தான் ஜெய்ச்சேன்னு சொன்னான். ஊர் தலைவர் அசந்து போய்டடாரு. --- கதை மூலம்: Tinkle…
K
Kathai Solli

புஷ்டி லேகியம் ஒரு ஆடு. செவந்திப்பட்டில தான் அதோட வீடு. அந்த ஊருக்குப் பக்கத்துல ஒரு பெரிய காடு. பக்கத்து ஊர்ல இருக்க தன் சொந்தக்காரங்களைப் பாக்கப் போகணும்னா அந்தக் காட்டு வழியாத்தான் போகணும். அப்படி ஒருநாள், தன் சொந்தக்காரங்களைப் பாக்க, கையில குடம் நிறையத் தேன் எடுத்துட்டு, அந்தக் காட்டு வழியா ஆடு போயிட்டு இருந்துச்சு. அப்போ திடீர்னு, சொழுஞ்சொழுன்னு மழை பிடிச்சுருச்சு. நனைஞ்சுட்டேப் போக முடியாது, எங்கயாவது கொஞ்சம் ஒதுங்கி நிக்கலாம்னு பாத்துச்சு ஆடு. பக்கத்துலயே ஒரு குகை தெரிஞ்சுது. சரி மழை விடுற வரை அங்க இருப்போம்னு குகைக்குள்ள போச்சு. மழைல நனைஞ்ச சட்டை துணிமணில்லாம் புழிஞ்சுட்டு இருந்துச்சு. யாரோ வர்ற காலடி சத்தம் கேட்டுத் திரும்பி குகை வாசலைப் பார்த்தா, ஐயோ! சிங்கம் ஒன்னு, புலி ஒன்னு, பத்தாதத்துக்குக் கூடவே நரி ஒன்னு. என்னடா இது வந்த இடத்துல வம்பாப்போச்சுன்னு ஆடு திருதிருன்னு முழிச்சுது. அப்போ சிங்கம் ஆட்டைப்பார்த்து, “பயப்படாதீங்க! மழைல நல்லா நனைஞ்சுட்டீங்க போல. நாங்களும் மழைக்குத்தான் இங்க ஒதுங்கினோம்.”ன்னு சொல்லுச்சு. ஆடு ஆனா அதை நம்பல. சமயம் கிடைச்சா இவனுங்க நம்மள அடிச்சு விருந்து வைச்சுருவானுங்க. ஏதாவது பண்ணி மூணு பேரையும் இங்க இருந்து கிளப்பனுமேன்னு யோசிச்சுது. சிங்கமும் தானா வந்து பேச்சு குடுத்தது. “அந்தக் குடத்துல என்ன?”ன்னு ஆட்டைப் பாத்து கேட்டுச்சு. அதுக்கு ஆடு புத்திசாலித்தனமா, “ஓ, இதுவா! இது புஷ்டி லேகியம். ஒரு மருந்து. சாப்பிட்டா உடம்புக்கு ஒரு புதுத் தெம்பு வரும். கை கால்லாம் பலம் பெரும்.”ன்னு சொல்லுச்சு. “அப்படியா. அப்போ எனக்கும் கொஞ்சம் கொடேன். கை கால்லாம் வெடவெடங்குது.” ன்னு சொல்லுச்சு சிங்கம். “ஓ. கண்டிப்பா தரேன். ஆனா இதுல இன்னும் சிலது சேர்க்கணும். அப்போதான் இந்த மருந்து வேலை செய்யும்”ன்னு சொல்லுச்சு. “ஒன்னும் பிரச்சனை இல்ல. இன்னும் என்ன வேணும்னு சொல்லு. நான் ஏற்பாடு பண்றேன்”ன்னு கேட்டுச்சு சிங்கம். “ஒன்னுமில்ல. அதுல நரி வாலை நறுக்கி போட்டு நல்லா அரைக்கணும்”ன்னு சொல்லுச்சு ஆடு. சிங்கம் அப்படியே லேசாத் திரும்பி அங்க இருந்த நரியைப் பார்க்க, “அய்யய்யோ. ஆளை விடுங்கடா சாமி”ன்னு நரி அங்கருந்து ஓட்டம் பிடிச்சது. “டேய், டேய்.. நில்றா நில்றா”ன்னு சிங்கம் நரியைத் துரத்திட்டேப் போச்சு. அப்போ தனியா அங்க இருந்த அந்தப் புலியைப் பார்த்து ஆடு சொல்லுச்சு, “நல்லவேளை! நீ தப்பிச்ச”ன்னு. அதுக்கு, “ஏன் அப்படி சொல்ற”ன்னு புலி கேட்க, “இல்ல இல்ல.. நரி வாலோட சேத்து, புலிப் பல்லையும் புடுங்கி லேகியத்துல போடணும். ஆனா நான் தான் அதை சிங்கத்துக்கிட்ட சொல்லல”ன்னு ஆடு சொல்லுச்சு. “ஆகா.. இது விவகாரமான ஆடா இருக்கும்போலயே”ன்னு நினைச்ச புலி உடனே, “சரி.. மழை விட்டுருச்சுன்னு நினைக்குறேன். நான் அப்படியே கிளம்புறேன்”ன்னு சொல்லிட்டு அங்கருந்து நடையைக் கட்டியது. ஒரு வழியா இவனுங்கட்டருந்து தப்பிச்சோம் பிழைச்சோம்னு அங்கருந்து ஓட்ட ஓட்டமா தன் சொந்தக்காரங்களைப் பார்க்கப் போச்சு ஆடு. --- கதை மூலம்: The Goat's Medicine (Tinkle #020) - Story by Dr. S. Patel…
K
Kathai Solli

K
Kathai Solli

யார் உண்மையான குற்றவாளி என்று ராஜாவால் கண்டு பிடிக்க முடியவில்லை. ராணி விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக கூறினார். அப்படி வழக்கு என்ன? வாங்க கேக்கலாம்..
K
Kathai Solli

பிழைப்பிற்காக நகரம் செல்ல தீர்மானத்த ராமு வழியில் திருடர்களிடம் அகப்பட்டுக் கொண்டான். அவர்களிடமிருந்து தப்பித்தானா? அவன் கொண்டு சென்ற வைரம் என்னவானது? தெரிந்து கொள்ள இந்த கதையைக் கேளுங்கள்..
K
Kathai Solli

பொழுது விடியுமுன்னே எழுந்து, பால் கறக்க வாளியைத் தூக்கிக்கொண்டு போனான் குப்பண்ணா. பட்டியில் போய்ப் பார்த்தால் பசுமாட்டைக் காணோம். சரி, கட்டு அவிழ்ந்துகொண்டு, அக்கம்பக்கத்து வயலில் போய் மேய்ந்துகொண்டிருக்கும் என்று தேடிப்பார்த்தான். அங்கேயும் காணவில்லை. பாவம் அவன்; ஏழை விவசாயி. ஒற்றைப் பசுமாட்டை வளர்த்து, அது தரும் பாலைக் கறந்து விற்றுத்தான் வருமானம் அவனுக்கு. முதலுக்கே மோசம் போல், இப்போது அந்த பசுமாட்டைக் காணவில்லை. “ஐயா, என் மாட்டைப் பார்த்தீர்களா?.. அம்மா, என் மாட்டைப் பார்த்தீர்களா?.. பட்டியில் தானே கட்டியிருந்தேன். எப்படிப் போச்சோ தெரியலியே?” என்று ஊர்க்கார்களிடம் புலம்பினான். ஆனால் யாருக்கும் அவன் மாட்டைப் பற்றிய விவரம் தெரியவில்லை. “அப்போ, இரவு எல்லோரும் தூங்கும்போது யாரோ திருடன் மாட்டை ஓட்டிக் கொண்டுபோயிருக்க வேண்டும்” என்று அனுமானித்துக்கொண்டான். தன் மாடு களவுபோனதைப் பற்றி ஊர்த்தலைவரிடம் சென்று தெரிவித்தான். அவர் அதை விவரமாகக் கேட்டுக்கொண்டு, ஊரிலுள்ள மற்ற விவசாயிகளிடம் திருடர்களைப் பற்றி எச்சரித்தார். “சரி, நரி தின்னக் கோழி கூவப் போறதில்ல.. காணாமப் போன மாடு இனி நமக்கு பால் தரப் போறதில்ல.. இன்னைக்குத் திங்கக்கிழம மேலப்பட்டி சந்தை. போனா ஒரு நல்ல பசுவாப் பாத்து வாங்கி வரலாம்” என்று நினைத்துக்கொண்டான். பால் விற்று சிறுகச்சிறுகச் சேர்த்தக் காசு மொத்தமும் எடுத்தக்கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான். செவலை, செம்பூத்து, பால் வெள்ளை, காரி என பல நிறங்களில் மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. நல்ல ஒரு மாடாக வாங்க வேண்டும் என்று சந்தை முழுதும் தேடி அலைந்தான் குப்பண்ணா. அங்கே தூர, அவனது மாடு போலவே ஒரு மாடு இருப்பதைக் கண்டு அருகில் போய்ப் பார்க்க, “அட.. இது நம்ம மாடு.. கள்ளப்பய எவனோ நம்ம மாட்டத் திருடி இங்க விக்க ஓட்டி வந்திருக்கானே..” என்று எண்ணிக்கொண்டு, தன் மாட்டை வைத்துக்கொண்டிருந்தவரிடம் போய் முறையிட்டான். “ஐயா, இது என் மாடு.. இது உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?” என்று கேட்டான் குப்பண்ணா. மாட்டை வைத்திருந்தவர் அதற்கு, “கிடைச்சதா? இது என் மாடப்பா.. நான் இதை ரெண்டு மூணு வருஷமாவே வளர்த்து வரேன்.” என்றார். இது நம்ம மாடு என்று எப்படி நிரூபிப்பது என்று யோசித்த குப்பண்ணா, சட்டென மாட்டின் இரு கண்களையும் தன் இரு கைகளால் பொத்திக்கொண்டு, “ஐயா ஊர்க்காரங்களே! இங்க கேளுங்க.. இது என் மாடு. நேத்து ராத்திரிலருந்து காணல. ஆனா இது இவர் மாடுன்னு விக்க ஓட்டி வந்திருக்காரு. உண்மையிலேயே இது இவர் மாடுன்னா, இந்த மாட்டுக்கு ரெண்டு கண்ணுல எந்த கண்ணு குருடுன்னு இவர் சரியா சொல்லட்டும், நான் இந்த மாட்டைக் கேக்கல.. இதுக்கு நீங்கல்லாம் சாட்சி” என்றான். அதற்கு அந்தத் திருடன், திகைத்துப் போய், ‘இடது கண் குருடு’ என்று உத்தேசமாகச் சொன்னான். “இடது கண்ணா?..” என்று குப்பண்ணா இழுக்க, “இல்லை.. இல்லை.. வலது கண்..” என்று இப்போது மாற்றிச் சொன்னான் அந்தத் திருடன். “ஐயா.. நீங்களே பாத்தீங்க.. முதலில் இடது கண் என்று சொன்னாரு. இப்போது வலது கண் ங்கிறாரு. ஆனால் உண்மையில் என் மாட்டிற்கு எந்தக் கண்ணிலும் பழுதில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.” என்றான் குப்பண்ணா. அசட்டுத்தனமாக மாட்டிக்கொண்ட திருடன் அங்கிருந்து நழுவப் பார்க்க, சுற்றி நின்ற ஊர் மக்கள் அவனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குப்பண்ணா அவன் மாட்டை ஓட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக வீடு திரும்பினான். --- கதை மூலம்: Tinkle #006…
K
Kathai Solli

வினை விதைத்தவன் வினையறுப்பான் எனும் கருத்தில் அமைந்த, சிவா என்கிற ஒரு புத்திசாலி இளைஞனின் கதை. --- கதை மூலம்: Tinkle Double Digest #006
தன் தனித்துவத்தையும் வலிமையையும் அறிந்த ஒரு குட்டி ஆட்டின் கதை.
K
Kathai Solli

கதை மூலம்: Tinkle Double Digest #006ல் வெளியான ஒரு படக்கதையின் தமிழாக்கம்.
K
Kathai Solli

கரடி சொன்ன இரகசியம் அடர்ந்த காட்டு வழியே இரண்டு நண்பர்கள் நடந்துபோய்க் கொண்டிருந்தனர். திடீரென்று பெரிய கரடி ஒன்று எதிரே வருவதைப் பார்த்தனர். ஏய்! கரடி! கரடி! ஓடு! ஓடு! இருவரும் ஓட்டம் பிடித்தனர். ஓடும்போது கால் இடறி ஒருவன் மட்டும் கீழே விழுந்துவிட, மற்றவன் ஓடி மரத்தில் ஏறிக்கொண்டான். “டேய்! கால்ல அடிபட்டுருச்சுடா.. வந்து தூக்கிவிடுறா..” என்று விழுந்தவன் உதவி கேட்டான். மரத்தில் தொற்றிக்கொண்டிருந்தவன் உடனே, “எதுக்கு? கரடி வந்து என்னையுங் கடிக்கிறதுக்கா? போடா..” என்று, நண்பனுக்கு உதவாமல் தான் தப்பித்துக்கொண்டால் போதும் என்று மரத்திலேயே இருந்துவிட்டான். கரடி நெருங்கி வருவதைக்கண்டு, கீழே விழுந்தவன், மூச்சைப் பிடித்துக்கொண்டு பிணம் போலப் படுத்துக்கொண்டான். கரடி அவன் முகத்தருகே வந்து முகர்ந்து பார்த்தது. அவன் அசைவற்றுக் கிடக்கவே, வந்த வழியே போய்விட்டது. கரடி தூரப் போய்விட்டதா என்று எட்டிப் பார்த்துவிட்டு மரத்திலிருந்து இறங்கினான் மற்றவன். கீழே விழுந்தவன் மெல்லக் கையூன்றி எழுந்துகொண்டிருக்கையில், அவன் வந்து “என்ன? கரடி வந்து உன் காதுல எதோ சொன்னமாதிரி இருந்துச்சு!” என்று கேட்டான். “ஆமாண்டா, சொல்லுச்சு! கஷ்டம் வரும்போது காப்பாத்தாதவன்லாம் நண்பனே இல்லன்னு சொல்லுச்சு” என்றான் கோபமாக. --- கதை மூலம்: Tinkle #004…
Bienvenue sur Lecteur FM!
Lecteur FM recherche sur Internet des podcasts de haute qualité que vous pourrez apprécier dès maintenant. C'est la meilleure application de podcast et fonctionne sur Android, iPhone et le Web. Inscrivez-vous pour synchroniser les abonnements sur tous les appareils.